யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு

புனர்வாழ்வு மற்றும் மீற்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்துக்களை இழந்த குடும்பங்களிற்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது யுத்தத்தினால் உயிரிழந்தவர்கள், அங்கவீனராக்கப்பட்டவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் மீளகுடியேற்ற அமைச்சின் செயலாளர், சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய சிறிதரன்……,

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொத்துக்கள், மற்றும் உயிரிழப்புக்களை சந்தித்த பல குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள புாதிலும், அவர்களிற்கும் நட்டஈடுகளை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கரு்தது தெரிவித்தார்.

நேற்றய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் அவரிடம் கரு்தது கேட்க ஊடகவியலாளர்கள் முனைந்தபோதிலும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

 

Share the Post

You May Also Like