வாழைச்சேனையில் பெண்களுக்கு வாழ்வாதார உதவி

கைத்தொழில் வாணிப அமைச்சினால் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான ஒதுக்கீட்டு வேலை திட்டமானது கடந்த 2017ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகவும் வறிய நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் சுயதொழில் உதவி கோரியவர்களினது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது விபரங்களை கைத்தொழில் வாணிப அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டது.

அதன்பிற்பாடு அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சினால் உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிற்பாடு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 26 குடும்பங்களுக்கு சுயதொழிற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி.பிருந்தா நிரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் அதிதிகளாக செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் வாணிப அமைச்சின் அலுவலக பொறுப்பாளர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like