சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு “மகளீர் தின விழா – 2018”

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கைதடி தென்கிழக்கு உவரி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் “மகளீர் தின விழா – 2018” சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இவ் மகளீர் தின விழாவில் மகளீரை கௌரவப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், கிராம சேவையாளர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து மகளீர் தின விழாவை சிறப்பித்திருந்தனர்.

இவ் விழாவில் மகளீருக்கான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share the Post

You May Also Like