மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்

கடந்த 2018,பெப்ரவரி10,ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் எண்ணிக்கையையும் அதன் முழுவிபரங்களையும் மீட்டுப்பார்போம். தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களும் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் விபரம் கடந்த 2018 மார்ச்9 ம் திகதி 2061/42-15 ஆம் இலக்க அதிவிசேட வர்தமானியில் வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, ஒருநகரசபை,பத்து உள்ளுராட்சி சபைகள் உட்பட மொத்தம் 12,சபைகளுக்கான தலைவர்கள் உபதலைவர்கள் தெரிவு கடந்த 03/04/2018,ம் திகதிதொடக்கம் 10/04/2018 வரை இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி நகரசபை, ஏறாவூர் நகரசபை, ஓட்டமாவடி பிரதேசசபை முஷ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட சபைகள். இதில் ஓட்டமாவடி,ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் தலா இரண்டு உறுப்பினர்கள் மட்டும் தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள். இந்த மூன்று சபைகளும் தலைவர், பிரதிதலைவர் ஆகியோர் முஷ்லிம் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஏனய ஒன்பது சபைகளில்..!

பட்டிருப்பு தொகுதி:- 

மண்முனை தென் எருவில் பிரதேசசபை(களுதாவளை),
போரதீவுப்பற்று பிரதேசசபை(வெல்லாவெளி)
மண்முனை தென்மேற்கு பிரதேசசபை(பட்டிப்பளை),
ஆகியமூன்றுசபைகளும் தவிசாளர்கள்,பிரதிதவிசாளர்கள் அனைத்தையும் தமிழ்தேசியகூட்டமைப்பு கைப்பற்றி முழுமையான ஆட்சியை தக்கவைத்தது.

மட்டக்களப்பு தொகுதி:-

மட்டக்களப்பு மாநகரசபை,மாநகரபிதா,பிரதி மாநகரபிதா மற்றும் மண்முனை மேற்கு பிரதேசசபை(வவுணதீவு),தவிசாளர், பிரதிதவிசாளர் பதவிகளுடன் இரண்டுசபைகளும் முழுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்தது. ஆனால் மண்முனைப்பற்று பிரதேசசபை(ஆரையம்பதி) பிரதி தவிசாளர் பதவி மட்டுமே தமிழ்தேசியகூட டமைப்புக்கு கிடைத்தது.

கல்குடாத்தொகுதி:-

ஏறாவூர்பற்று பிரதேசசபை(செங்கலடி): பிரதிதவிசாளர் பதவி மட்டும்
கோறளைப்பற்று வடக்கு(வாகரை) பிரதேசசபை : தவிசாளர் பதவிமட்டும், தமிழ்தேசியகூட்டபைப்புக்கு கிடைத்தது.
கோறளைப்பற்று பிரதேசசபை(வாழைச்சேனை)முற்றுமுழுதாக தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கிடைக்கவில்லை.

மொத்தத்தில் இந்த உள்ளூராட்சிசபை தேர்தல் முறையானது அறுதிப்பெரும்பான்மை இன்றி அநேகமான சபைகள் தொங்குநிலையில் ஆசனங்கள் உள்ளதால் வேறு கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12, சபைகளிலும் தமிழர் பிரதிநித்துவம் கூடுதலாக உள்ள 9, சபைகளில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 5, பிரதேச சபைகளில் தமிழ்தேசியகூட்டமைப்பு முழுமையான ஆட்சி அதிகாரத்திலும் 2, சபைகளில் பிரதி தவிசாளர் பதவியும்,ஒரு சபையில் தவிசாளர் பதவியும், இன்னொருசபையில் தவிசாளரோ பிரதிதவிசாளரோ பெறமுடியாமல் போய்விட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சிசபை தேர்தல் பழையமுறையில் விகிதாசாரதேர்தல் முறையில் இடப்பெற்றிருப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9, சபைகளையும் அறுதிப்பெரும்பான்மையுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையால் எந்த வட்டாரத்திலும் வெற்றிபெறாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலகட்சிகளும் உறுப்பினர்களும் சுயேட்சைகுழு உறுப்பினர்களும் பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் பெற்று தவிசாளர் பிரதிதவிசாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில சபைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது இந்த தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு இவ்வாறானவர்களை தலைவர்களாக மக்கள் தொடர்ந்தும் மதிப்பு கொடுத்து ஏற்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.

-பா.அரியநேத்திரன்-

Share the Post

You May Also Like