யாழ். மாநகர சபையின் கன்னியமர்வு

யாழ். மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இதன்படி யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும், மாநகர வாயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சபைக்கு சம்பிரதாய பூர்வமாக அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது, யாழ். மாநகரசபை முதல் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 9.30 மணியளவில் சபை ஆர்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கன்னியுரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like