தனி­நாடு கோரும் நில­மையை தீர்­மா­னிப்­பது கொழும்பு அரசே- அமைச்­சர் மனோ!!

தமிழ், சிங்­க­ளம், முஸ்­லிம் என்­ப­தைப் புற­மொ­துக்கி இது சிங்­கள நாடு என்­றால் மீண்­டும் தனி­நாடு கோரிப் போரா­டும் நில­மையே ஏற்­ப­டும். அதைத் தீர்­மா­னிப்­பது கொழும்பு அர­சு­தான். மூன்று மொழி­க­ளும் நான்கு மதங்­க­ளும் கொண்­டதே எமது நாடு என்று எம்­மால் அடை­யா­ளம் காணப்­பட்ட இந்த நாட்­டில் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம் என்­னும் நில­மையை தோற்­க­டித்து வரு­கின்­றோம். இவ்­வாறு தேசிய நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் தாவடி வேத விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழ­கப் பரி­ச­ளிப்பு நிகழ்வு நேற்று இடம்­பெற்றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்த மண்­ணில் போராட்ட வடி­வம் மாறி­யும் போராட்­டம் மாற­வில்லை. அந்­தப் போராட்­டம் உல­கி­லும் தொடர்­கின்­றது. தற்­போது சிரி­யா­வில் பனிப்­போர் மூட்­டுள்­ளது. அன்று எமது மண்­ணில் நிகழ்ந்­தது இன்று சிரி­யா­வில் இடம்­பெ­று­கின்­றது. எமது மண்­ணில் இடம்­பெற்ற போராட்­டத்­தின்­பின்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரே நாட்­டுக் கோட்­பாட்­டிற்­குள் வந்­துள்­ளது.

ஒரே நாடு என்­றா­லும் சரி, ஒரு நாடு இரு தேசம் என்­றா­லும் சரி நாம் பாரம்­ப­ரிய தேசிய இனம் என்­ப­தனை மறக்­க­மு­டி­யாது. அதே­நே­ரம் தமிழ், சிங்­க­ளம், முஸ்­லிம் என்­ப­தனை தவிர்த்து சிங்­கள நாடு என்­றால் மீண்­டும் தனி­நாடு கோரிப் போரா­டும் நில­மையே ஏற்­ப­டும். அதைத் தீர்­மா­னிப்­பது கொழும்பு அர­சு­தான். இங்கே முழு சிங்­கள தேசத்­தை­யும் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது விட்­டா­லும் ஓர­ள­வே­னும் வெற்­றி­கொள்ள முடி­யுமா என்­ப­தும் தெரி­யாது.

தந்தை செல்வா இலங்­கைத் தலை­வர்­க­ளு­டன் ஒப்­பந்­தம் எழு­தித் தனது வழி­யில் வெற்­றி­பெற முனைந்து முடி­யா­மல் போகவே தமி­ழனை கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும் என்­றார். அதன் பின்பு அமிர்­த­லிங்­கம் இந்­தி­யா­வின் ஊடாக தீர்­வுக்கு முயன்­றார். 13ஆம் திருத்­தச் சட்­டம் கொண்­டு­வந்­தார். அதன்­பின்­னர் பிர­பா­க­ரன் ஆயுத வழி­யில் முயன்ற சம­யம் ஈழத் தமி­ழர்­க­ளின் வேண­வாக்­கள் உல­கம் முழு­வ­தும் ஒலித்­தது. இருப்­பி­னும் இறு­தி­யில் அது­வும் திருப்தி இன்றி முடிந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் இந்­தி­யா­வை­யும் தாண்டி உலக நாடு­கள் மற்­றும் ஐ.நா. அமைப்­பின் ஊடா­கப் புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்­சி­யில் ஈடு­ப­டு­கின்­றார். நான் சிங்­கள மக்­களை சக வாழ்வு வழிக்கு கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றேன். அது சரி­வ­ரும் என்று நான் கூற­வில்லை. ஆனால் சரி­வ­ராது போனால் இந்த நாட்­டையே கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும்.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தெற்­கில் சிங்­கள மொழி­யில் எடுத்­துக்­கூ­றிய ரவி­ராஜை, 2001ஆம் ஆண்டு நான் காணும் வரை­யில் எனக்­குச் சிங்­க­ளம் தெரி­யாது. அவ­ரைப் பின்­பற்­றியே சிங்­க­ளம் கற்­றேன். எமது மக்­கள் பட்ட துன்­பத்தை அவர்­கள் துய­ரத்தை அதே­போல் கோபத்­தை­யும் தெற்­கில் சிங்­கள மொழி­யில் கூறி­வ­ரு­கின்­றேன். இதே­நே­ரம் முழுச் சிங்­க­ள­வர்­க­ளும் அயோக்­கி­யர்­களோ அல்­லது கெட்­ட­வர்­களோ கிடை­யாது என்­ப­த­னை­யும் தெரி­விக்க விரும்­பு­கின்­றேன் – என்­றார்.

 

Share the Post

You May Also Like