தமிழர் விடுதலைக்கூட்டணியின் தீர்மானத்தை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை

மன்னார் நிருபர்-
(13-04-2018)
தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மாறாக இன அழிப்புச் செய்த சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்த அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் நேற்று வியாழக்கிழமை(12) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிபபிடுகையில்,,,
 கொள்கை பற்றோடும் விசுவாசத்தோடும் வாக்களித்த மக்களிற்கு தேர்தல் அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இந்த இழி செயலில் ஈடுபட்டனர்.
 அவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.  இவ்வாறான ஒரு சில சந்தர்ப்பவாதிகளால் தமிழ் தேசியம் ஒருபோது தளர்வடையப் போவதில்லை.
 குறித்த நபர்களே அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போவார்கள்  என்பதே கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.   தவறான பாதை வகுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழின அழிப்பாளர்களுடனும் தமிழ்த் தேசிய விரோத சங்கதிகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, கருணாக்குழு போன்றவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது போல  எமது அங்கத்தவர்களும் நிலை மாற முடியாது என்பதே எமது திடமான முடிவு.  வட கிழக்கு எங்கும் எவரையும் ஆதரிப்பதில்லை என்பது எமது கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்.
 ஆகவே இந்த தீர்மானத்தை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.என சனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share the Post

You May Also Like