யாழ்.மாநகரசபை 02ஆம் வட்டார மழைவெள்ளப்பாதிப்பு – வட்டார உறுப்பினர் ப.தர்சானந், யாழ்.மாநகரசபை துணைமேயர் து.ஈசன் பார்வையிட்டனர்.

று மதியம் யாழ்.நகரப்பகுதியில் பெய்த மழையால் வீதிகள், ஒழுங்கைகளில் தேங்கிய வெள்ளபாதிப்பு சம்பந்தமான பாதிப்புக்களை யாழ்.மாநகரசபையின் துணைமேயர் து.ஈசன்மற்றும் ,  யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரடியாகப்பார்வையிட்டு உரிய தரப்புகளினூடாக நடவடிக்கை எடுக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது
இன்று மதியம் யாழ்.நகர் மற்றும் புறநகர்ப்பகுதியில் பெய்த மழையினால் வீதிகள் ஒழுங்கைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து    யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சீனியர் ஒழுங்கை மற்றும், கஸ்தூரியார் வீதி – அரசடி வீதிச்சந்தி, மற்றும் கே.கே.எஸ் வீதி – சீனியர் வீதி உள் ஒழுங்கை ஆகிய இடங்களில் தேங்கியுள்ள வெள்ள விபரங்களை   யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் இனது அழைப்பின் பேரில் யாழ்.மாநகரசபையின் துணைமேயர் து.ஈசன் மற்றும் உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மாநகரசபையின் பொறியியல் பிரிவுடன் கலந்துரையாடப்பட்டதன் பேரில், புத்தாண்டு விடுமுறையின் பின்னர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இக்களவிஜயத்தில் யாழ்.மாநகரசபையின் துணைமேயர் து.ஈசன் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார  உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடினர்.
Share the Post

You May Also Like