ராஜபக்ஷ ஆதரவாளர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று (திங்கட்கிழமை) காலை அவர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய நிலையில், விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, 53 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் ஏற்கனவே அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இதே குற்றச்சாட்டின் பேரில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு, கடந்த 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926