வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தலைமையிலான முதலாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ் குடா நாட்டில் இதுவரை இடம் பெற்ற கன்னி அமர்வுகளுக்கு முன்னுதாரணமாக கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையிலே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில்  சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர்களும்,நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளரும்,கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடாக நெல்லியடி பொதுசந்தையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர் .

இதன் போது வாழ்வாதார தொழிலாக தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்

புதிதாக அமைக்கப்பட்ட பழக்கடைக்கு மின்சார வசதி இல்லை எனவும், மலசலகூட வசதி,கழிவகற்றல் வாகனம் சந்தையில் தரித்து காணப்படுவதாகவும்,வாகன தரிப்பிடம் பகல் முழுவதும் இயங்குவதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும்.தற்காலிகமாக இயங்கும் சந்தைக்கு மின்சாரவசதி இல்லையெனவும்,அதற்காக மின்சார இணைப்பை பெற முயற்சித்த வியாபாரிகள் இருவர் அண்மையில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகி இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

உடனடியாக பிரதேச சபை பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கினங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சபை அமர்வின் பொழுது விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென தவிசாளர் ஐங்கரன் அவர்கள் உறுதி மொழி அளித்துள்ளார்

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926