வவுனியா நகரசபை ஆட்சியதிகாரம் அதிக ஆசனங்களைப் பெற்றகட்சிக்கு கிடைக்காமை வெளிப்படுத்தும் செய்தி என்ன?

தொகுதிவாரி தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகரசபையின் ஆட்சியதிகாரம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி வசமானமை மிகச் சிறந்த உதாரணம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

21 ஆசனங்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் அதிகப்படியாக 8 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியமைக்க முடியாது போயிருக்கின்ற நிலையில், மொத்தமாக 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ,பொதுஜன பெரமுண மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் கூட்டு அமைத்து இன்றையதினம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

இதுதொடர்பாக கருத்துவெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசற்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்றுசேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கடந்த பெப்ரவரி 10;திகதி போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் விகிதாசார முறைமையால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்குத் தெரிவாகினர் . தற்போது ஏனைய கட்சிகளுடன் கூட்டுவைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடித்துள்ளமை குறிப்பிடடத்தக்கது எனவும் அவர் மேலும் கூறினார்.

 

Share the Post

You May Also Like