ஜனாதிபதி − பிரதமர் நாளை முக்கிய சந்திப்பு

புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு  நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும்…

அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்

அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

வடமராட்சி சித்திரை வருட சிறப்பு நிகழ்வு

கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம்,கலைவாணி முன்பள்ளி ரேஞ்சஸ் விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய சித்திரை வருட சிறப்பு நிகழ்வு அண்மையில் கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக…

விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்?

விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும் கெடுபிடிகள் நிறைந்திருந்த காலகட்டத்திலேயே 2015ம் ஆண்டு வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமைக்குஈடுகொடுக்கக்கூடியவராகவும் பொருத்தமானவராகவும் மக்கள் இவரைக் கண்டுகொண்டனர். கம்பன் கழகம் உள்ளிட்ட பல தமிழ்த்தரப்பும் அதை வரவேற்றது. திரு.சம்பந்தன் உள்ளிட்ட அரசியற்தலைவர்களும் அதை மனமார ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக திரு.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார். பதவியைப் பொறுப்பேற்றபோது அவர் ஒரேயொரு நிபந்தனையை மட்டுமே வித்தித்திருந்தார். அதாவது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தாம் இப் பொறுப்பை வகிப்பார் என்று. பதவி வந்தபின் அவரது எண்ணங்கள் மாற்றமடையத் தொடங்கியது. யாரால் அவர் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே கம்பன் கழகமே அவருடன் பகிரங்கமாக முரண்படத்தொடங்கியது. தாம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்பட்டவரல்ல என்று ஆரம்பித்தார். இருந்தும,; வாராது வந்த மாகாணசபையைப் போட்டுடைக்கக்கூடாதே என்றுஅவரது போக்கிற்கு இடையூறு விளைவிக்கப்படவில்லை. வடமாகாண அபிவிருத்திதான் அந்தச் சபையின் முதலாவதும் முக்கியமானதுமான குறிக்கோள். அதை ‘தொப்’ என்று போட்டுவிட்டு அவர் அரசியல் விடயங்களுள் தன் மூக்கை நுழைக்கஆரம்பித்ததுதான் எல்லாவற்றையும் நாசப்படுத்திய செயற்பாடு. அரசியல் விடயங்களைக் கவனிக்க அரசியலில் மிகுந்த அனுபவம்கெர்ண்ட திரு சம்பந்தன், திரு.சேனாதிராஜா போன்றவர்கள்இருக்கும்போது இவர் அவற்றுள் ஏன் மூக்கை நுழைத்துக்கொண்டார் என்பதுதான் பெருங் கேள்வியாக இருக்கிறது. தமக்குத் தரப்பட்ட கடமையை அல்லவா அவர் செய்யவேண்டும். அதற்காககத்தானே அவருக்க இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. சரி ஒருவேளை அதையும் தாண்டி அரசியல் விடயங்களி;ல் அப்படி ஏதவாவது தமக்கு சிறந்த கருத்துக்கள் இருக்குமென அவர் கருதியிருப்பின் அவற்றை அந்தத் தலைமைக்கு தெரியப்படுத்திச்செயற்படுவதுதானே. அதை விடுத்து 2வருடம் மட்டுமே பொறுப்பெடுப்பேன் என்றவர் இப்போது தாமே அரசியலுக்குத் தலைமை தாங்கப் போவதாகவும், புதுக் கட்சி தொடங்கப் போவதாகவும்அறிவித்துச் செயற்படுவது மிகவும் தரந்தாழ்ந்த செயற்பாடன்றி வேறென்ன? சிலருக்கு பதவி வந்ததும் அதன்மீது வெறிவந்துவிடும். செய்வதறியாது, அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எத்தகைய கீழ்நிலைக்கும் இறங்கத் தயங்கமாட்டார்கள் என்பதை அனுபவரீதியாகநாம் கண்டிருக்கிறோம். அந்த நிலையிலான பதவிப் பித்தில் இவர் தன்நிலை பிறழ்ந்துள்ளார் என்பதைத்தானே இந் நடவடிக்கைகள் காட்டிநிற்கின்றன. பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். அதைக்கூட ஆளுமையுடன் செயற்படவைக்கத் தெரியவில்லை. அதனை சுரேஷ்பிரேமச்சந்திரனும் பொன்னம்பலமும் ஆக்கிரமித்து வழிநடத்தத்தொடங்கினர். அரசியல் சாராத அமைப்பு என்றும் கூட்டமைப்புத் தலைமைக்கு எதிராகத் தாம் செயற்படமாட்டார் என்றும் பல தடவைகள் கூறிய கூற்றுக்கள் இவரது வஞ்சகச் செயற்பாட்டிற்குஉதாரணம். 2015ம் ஆண்டு தேர்தலின்போதும், அண்மையில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போதும் கூட்டமைப்புக்கு எதிரான அவரது செயற்காடு அவரது கண்ணியமின்மையைப்பறைசாற்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றமை அவரது ஆன்மீக சிந்தனைகளுடன் எப்படி ஒத்துப் போக முடியும்? அமைச்சர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் வைத்தமை, தவறான விதத்தில் அனந்தி, சர்வேஸ்வரன் போன்றோரை அமைச்சர்களாக்கியமை இவையெல்லாம் இவரின் தரத்தை மிகவும்தாழ்த்திவிட்டுள்ளன. தமிழர்கள் இன்று பிரிந்துபட்டு நிற்கும் நிலையை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். பொன்னம்பலம், பிரேமச்சந்திரன் போன்றோரை உசுப்பேத்தியது அல்லது அவர்கள் இவரைப்பயன்படுத்தியமை யாவுமே இவரது தூரநோக்கற்ற, தமிழர்க்குப் பாதகமான செயற்பாடுகளேயாகும். தமிழர் மத்தியில் ஒரு எதிர்மறையான, அங்கலாய்ப்பான, விரக்தியான நிலையை இவர்தோற்றுவித்துள்ளார்.  இவரது செயற்பாடுகளால் இவர் தமிழர்களுக்கு இதுவரை எதுவித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான நிலையற்ற கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கொண்ட திரு.விக்னேஸ்வரன் இனிமேலும் தமிழர் தொடர்பான விடயங்களில் எந்தவிதமான  பங்கினையும் வகிக்காது ஒதுங்குவதே தமிழர்க்கு செய்யக்கூடிய சேவையாகும்.

ஐ.தே.கவின் பட்டியலை நிராகரித்தார் மைத்திரி! – முக்கிய அமைச்சுகள் சு.க. வசம் செல்லும் அறிகுறி

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு என்னென்ன அமைச்சுகள் வேண்டுமெனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியால் முதலில் முன்வைக்கப்பட்ட பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து…

சாவகச்சேரியில் புத்தாண்டு நிகழ்வுகள்

சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை புவேந்தன் பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இதில் பொங்கல் பொங்கி சிறார்களுக்கு கைவிசேடங்கள் வழங்கப்பட்டன.  

ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்! அச்சத்தில் மக்கள்!

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரியின் கடலோரப்…

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் மோச­டி : பொதுமக்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும்

பேஸ்புக் உள்­ளிட்ட ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பொதுமக்­க­ளி­டத்தில் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் சில உரு­வா­கி­யுள்­ளன. எனவே இது தொடர்பில்…

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வரவேற்பு

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குத் தெரிவாகிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நிகழ்வு   இன்று   நடைபெற்றது. கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூசை…

யாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை; இருவரும் பலியான பரிதாபம்!

குருணாகல் – பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…