பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உபதவிசாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான கா.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியின் மூலம் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய முன்றலில் ஆலயச் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உபதவிசாளர் கா.ராமச்சந்திரன் உட்பட ஆலய பிரதமகுரு, ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் உபதவிசாளர் கா.ராமச்சந்திரன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் பெறப்பட்ட கோழிக்குஞ்சுகள் அதிதிகளால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like