இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயரும், குறித்த பட்டியலின் அடிப்படையில் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஞானமுத்து சிறீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பட்டியலின்படி, முதலாவது இடத்தில், விஜேபால ஹெட்டியாராச்சி, இரண்டாம் இடத்தில் ஞானமுத்து சிறீநேசன், மூன்றாம் அநுர குமார திசாநாயக்க, நான்காவது இடத்தில் புத்திக பத்திர மற்றும் ஐந்தாம் இடத்தில் கயந்த கருணாதிலக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share the Post

You May Also Like