இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் வேளை, மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மத்திய , சப்ரகமுவ , தென் , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , கொழும்பு தொடக்கம் காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை திடீரென அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , மழையுடனான காலநிலை காரணமாக தொடர்ந்தும் உடவளவை நீர்த்தேகத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share the Post

You May Also Like