இராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது- மஹிந்த குற்றச்சாட்டு

நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்வது மக்கள் அனைவரது கடமையாகுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களையும் அதன்போது உயிர்நீத்த மக்களையும் நினைகூர்வதற்கான தினம் மிகவும் அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கவோ நினைவுக்கூரவோ தவறிவிட்டதெனவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகையால் மக்களாகிய நீங்களாவது அவர்களை நினைவுகூர்வதற்கும் போற்றுவதற்கும் மறக்கக்கூடாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like