தியத்தலாவையில் மீண்டும் ஒரு சம்பவம் – பதற்றத்தில் படையினர்!!

தியத்தலாவயில் உள்ள வானூர்திப் படை பயிற்சி முகாமில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டு வெடித்ததால் மூவர் காயமடைந்தனர் என்று வானூர்திப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் வானூர்திப் படையில் பணியாற்றும் பெண் ஒருவரும், இரண்டு படையினரும் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் தற்போது தியத்தலாவ ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share the Post

You May Also Like