வடக்கில் நினைவேந்தலுக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூர வடக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில், வடக்கின் இவ்வாறான சகல செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விசேட அறிவித்தலொன்றின் மூலம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தெற்கின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை நோக்கி நகர்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் நல்லாட்சியின் ஜனநாயக சூழலை பயன்படுத்தி பயங்கரவாத நகர்வுகளை நோக்கி செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மே-18 தினத்தை தெற்கில் இராணுவ வெற்றி தினமாக இன்றி, தேசிய வெற்றி தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் அத்தினம் இன அழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, வடக்கில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நினைவுகூரல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எனினும், யுத்ததின்போது இறந்துவர்களை அவர்களினது உறவினர்கள் நினைவுகூருவதில் தவறேதும் இல்லை என்று, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரும் ஊடக இணை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926