டிசம்பர் முதல்வாரத்தில் மாகாணசபைகளுக்கு தேர்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

வடக்கு, வயம்ப மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் வரும் ஒக்டோபரில் நிறைவடைகிறது.

இந்த நிலையில் இந்த 6 மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு செப்ரெம்பரில் விடுக்கப்பட்டு டிசெம்பர் முதல் வாரத்தில் நடத்துவது என அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்த ஆண்டு இறுதியில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை, “மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது. புதிய கலப்பு முறைமையில் இல்லாமல் பழைய விகிதாசார முறைமையில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என கட்சி தீர்மானித்துள்ளது”என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share the Post

You May Also Like