மாகாணசபை தேர்தல் எங்கே? எப்போது? எப்படி?

மாகாண சபை தேர்தல்கள் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பாக பலரும் பலவிதமாக கதைப்பதை காணமுடிகிறது அது தொடர்பா சரியான புரிதல் வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை எழுதியுள்ளேன். ஆம் கிழக்குமாகாணசபை உட்பட சப்ரகமுவா,வடமத்திய மூன்று மாகாணசபைகளும் கடந்த 2017 செப்டம்பர் 30,ம் திகதியுடன் கலைக்கப்பட்டு தற்போது ஒரு வருடத்தை எட்டும் நிலையில் இதுவரை கலைக்கப்பட்ட இந்தமூன்று மகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

அதேவேளை இன்னும் மூன்று மாதங்களால் வடக்குமாகாணசபை உட்பட இன்னும் மூன்று சபைகள் கலைக்கப்படவுள்ளது,

இலங்கையில் உள்ள மொத்தம் ஒன்பது சபைகளில் ஆறுசபைகள் எதிர்வரும் மூன்று மாதங்களால் காலாவதியாகிய நிலையில் ஆறு சபைகளுக்கும் இந்த வருடத்திற்குள் தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.ஆனால் ஜனாதிபதி ஒன்பது சபைகளையும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தவுள்ளதாக கூறியுள்ளார் அப்படி ஒன்பது சபைகளும் ஒரே தினத்தில் நடத்த வேண்டுமாயின் 2019 செப்டம்பர் மாதமே மூன்று சபைகளின் ஆயுள் உள்ளது அதற்கு இடையில் அந்த மூன்று சபைகளையும் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை சம்மந்தப்பட்ட முதலைமைச்சர்கள் விரும்பினால் மட்டுமே அந்த சபைகளை ஆயுள்காலம் முடிவதற்கு முன் முதலமைச்சர் எழுத்துமூலமாக ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தால் மட்டுமே அந்த கடிதத்தை பெற்று ஜனாதிபதி ஒரு மாகாணசபையை அதன் ஆயுள்காலம் நிறைவுறுவதற்கு இடையில் கலைக்கப்படும்.

இது ஏற்கனவே 2008,ம் ஆண்டு ஆட்சியமைத்த கிழக்குமாகாணசபையை அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் அப்போதய ஜனாதிபதி மகிந்த ராஷபக்‌ஷவின் வேண்டுகோளை ஏற்று 2013,ம்திகதிவரை ஐந்துவருடங்கள் இருக்க வேண்டிய கிழக்குமாகாணசபையை நான்கு வருடங்களில் 2012,ல் அப்போதய முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தனிடம் கடிதத்தை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி மகிந்தராஷபக்‌ஷ கிழக்குமாகாணசபை கலைத்து தேர்தலை முற்கூட்டியே2012ல் நடத்துவதற்கு ஆணைபிறப்பித்தார்.

அந்த தேர்தல்கள் எல்லாம் விகிதாசார முறையில்தான் இடம்பெற்றது தேர்தல் என்றால் ஒரே முறைதான் அதுவிகிதாசார விருப்பு வாக்கு முறை என்பது அப்போது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இப்போது உள்ள சிக்கல் நிலை என்ன வென்றால் மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டு ஐம்பது வீத தொகுதி பிரதிநித்துவமும் ஐம்பது வீதம் விகிதாசார பிரதிநித்துவமும் அதில் கட்டாயம் பெண்கள் பிரதிநித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு கலப்பு முறை தேர்தல் என பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்த சட்டம் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அதன்பின்பு தொகுதி ரீதியான பிரிப்புக்காக ஒரு எல்லை நிர்ணயகுழு பேராசிரியர் தவலிங்கம் தலைமையில் ஜனாதிபதி மைத்திரி நியமித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2017 நவம்பர் மாதம் சென்று மக்களின் மற்றும் அரசியல்கட்சிகளின் ஆலோசனைகளை பெற்று மாகாணசபை தொகுதிகள் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் அந்தந்த மாகாணசபை களில் உள்ள மாவட்டங்களை தனித்தனியாக ஆய்வு செய்து தற்போது அந்த மாகாணசபை புதிய தொகுதிகள் அடங்கிய அறிக்கை உள்ளூராட்சி மகாணசபை அமைச்சரிடம் நியமிக்பப்பட்ட எல்லைநிர்ணய சபை உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கையளித்துவிட்டனர்.

அந்த தொகுதி எவ்வாறு பிரிக்கப்பட்டது என்றால் 2012,ம் ஆண்டு புள்ளிவிபரம் அடிப்படையில் மொத்த சனத்தொகையை ஆறாக வகுத்து அதன் அடிப்படையில்தான் தொகுதி பிரிக்கப்பட்டு எல்லைநிர்ணயம் ஆராயப்பட்டு தொகுதிகள் வரையறை செய்யப்பட்டது அறிக்கை தயாரிக்கப்பட்டது அது சம்மந்தமாக பாராளுமன்றில் இந்த அறிக்கை சமர்பித்து விவாதிக்கப்பட்டு அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களால் அங்கீகரித்தபின்பே அல்லது ஏகமனதாக அங்கீகரித்த பின்பே அந்த கலப்பு தேர்தல் புதியமுறையில் நடத்த வாய்ப்புக்கள் உள்ளது.

இல்லையாயின் அதை பழைய விகிதாசார முறையில்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என அநேகமான அரசியல் கட்சிகள் விரும்பினால் அதுவும் பாராளுமன்றத்தில் அதற்கான காரணத்தை தெரிவித்து விவாதித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டு அல்லது ஏகமனதாக ஏற்று விகிதாசார முறையில் தேர்தல் நடத்த ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டும். இன்னும் ர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்த முடியும்.

இறுதியாக கடந்த பெப்ரவரி 10,ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் புதியமுறையில் அறுபதுவீத வட்டாரமும்,நாற்பது வீத விகிதாசார முறையிலும் இடம்பெற்று அநேகமான கட்சிகள் அறுதிப்பெரும்பான்மை எடுக்க முடியாமல் ஏனய சிறுகட்சிகளின் சுயேட்சை குழுக்களின் ஆதரவைபெறவேண்டிய நிலையும் எந்தவட்டாரத்திலும் வெற்றி பெறாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றவர்கள் செல்லாக்காசு உறுப்பினர்களாகவும் தவிசாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்ட வரலாறே இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் கண்ட அனுபவமாகும்.

இவ்வாறான நிலை மாகாணசபை தேர்தலிலும் ஏற்படும் எந்த ஒருகட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெற முடியாமல் தொங்கு நிலையில் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் வரலாம் என்பதை கருதியே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் அநேகமான கட்சிகள் பழைய முறையிலேயே மாகாணசபை தேர்தல் நடத்தவேண்டும் என விரும்புகின்றனர் அப்படி அரசியல் கட்சிகள் கட்சிதலைவர்கள் விரும்பினால் பாராளுமன்ற கட்சிதலைவர்கள் கூட்டத்தில் இதனை தெரியப்படுத்தி முதலில் அவர்களின் சம்மதத்தை பெற்றுக்கொண்டு அதன்பின் இந்த திருத்த சட்டமூலத்தை உள்ளூராட்சி மகாணசபை அமைச்சர் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக சமர்பித்து விவாதிக்கப்பட்டு ஏகமனதாக அல்லது வாக்கெடுப்பு மூலமாக எனின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைபலத்துடன் பழைய விகிதாசார தேர்தல் முறையில் மகாணசபை தேர்தலை நடத்தலாம்.

மாகாணசபை தேர்தலை ஜனாதிபதி விரும்பினாலோ,பிரதமர் விரும்பினாலோ, தேர்தல் ஆணையாளர் விரும்பினாலோ அல்லது உள்ளூராட்சி மகாண அமைச்சர் விரும்பினாலோ எவராலும் நடத்தமுடியாது. இந்த உண்மையை விளங்காமல் சிலர் தாம் நினைத்தபடி மூன்று மாதத்தில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் இந்த வருடம் டிசம்பரில் இடம்பெறும் என ஊடகங்களில் அவரவர் பாட்டில் அறிக்கை விடுவதால் மகாணசபை தேர்தல்கள் இடம்பெறும் என எவரும் நினைக்ககூடாது. இன்னும் விபரமாக கூறுவதாயின் தேர்தல் நடத்த நான்கு முறைகள் மட்டும் உண்டு

அந்த நான்குவழிகள்:
1)மாகாண சபைகள் குறித்த எல்லைநிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுதல்

2)அல்லது பிரதமரால் நியமிக்கப்படும் குழுவினால் எல்லை நிர்ணயத்தை மீளாய்வுசெய்தல்.

3)அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற தேர்தல் முறையை மாற்றி விரைவில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளல்

4)அல்லது புதிய தேர்தல் முறைக்குப் பதிலாக பழைய தேர்தல் முறைக்குச் செல்வதாக சட்டத்தை நிறைவேற்றல்.

இந்த நான்கு மாற்று வழிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுமதி அங்கீகரித்தால் மட்டுமே மாகாணசபைத் தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்த முடியும்.இதுவிடயமாக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த 2018,ஏப்ரல் 11,ம் திகதியும் 19,ம் திகதியும் கூடிஆராய்ந்த போதும் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
முதலில் எந்த அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற அங்கீகாரம் வழங்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு பாராளுமன்றம் எந்தமுறையில் மகாணசபை தேர்தலை நடத்தும் சட்டமூலத்துக்கு ஆதரவு கொடுக்கின்றதோ அதன் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையகத்துக்கு உண்டு பாராளுமன்றத்தில் இதுவரை மகாணசபை தேர்தல் தொடர்பான எந்த ஒரு சட்டமூலமும் அல்லது ஏற்கனவே தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய சபை சமர்பித்த தொகுதி இறுதி அறிக்கை தொடர்பான விவாதிக்கும் தினமோ இதுவரை சபாநாயகர் அறிவிக்கவில்லை என்பதே உண்மை அப்படி இருக்கும்போது மகாணசபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என யூகத்தின் அடிப்படையில் மட்டுமே சிலர் கருத்து கூறுவதை காணமுடிகிறது.

தற்போது பிரதான அரசியல்கட்சிகளான நல்லாட்சியில் திருமணமான ஐக்கியதேசி கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரகட்சியும் மகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் மட்டும் அறியமுடிகிறது இதற்கிடையில் காதல் திருமணம் முடித்து நல்லாட்சி யென பதிவு செய்த இரண்டு கட்சிகளும் விவாகரத்து செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஏனய கட்சிகளும் அதனை பரிசீலித்து வருவதாக தெரிகிறது எப்படியான முடிவாக இருப்பினும் அது பராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு ஒரு முடிவு எட்டும்வரை சகல மகாணசபை தேர்தல்களும் எப்போது இடம்பெறும் என்பதையும் எப்படி இடம்பெறும் என்பதையும் திட்டவட்டமாக வரையறுத்து கூறமுடியாது இதற்கான பதிலை பாராளுமன்றம் மட்டுமே தரவேண்டும் என்பதே உண்மை.

-பா.அரியநேத்திரன்-

Share the Post

You May Also Like