இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்தமைக்கு கடும் கண்டனத்தையும் அரசாங்த்தின் மீது அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளமையானது….

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களோடு எவ்வித தனிப்பட்ட குரோதமும் எனக்கில்லை ஆனால் இந்து மக்களின் பிரதிநிதியாக வருபவர் ஒரு இந்துவாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் நாட்டின் ஜனாதிபதி அதனை செய்ய தவறி ஒட்டுமொத்த இந்து மக்களையும் அவமானபடுத்தியுள்ளார்.

இந்துக்கள் பசுவினை இறைவனுடைய சின்னமாகவும் கோமாதா வழிபாடு செய்பவர்கள் அப்படிபட்ட இந்துக்களின் பிரதி அமைச்சராக பசுவினை புசிப்பவரை நியமிப்பது இந்த நல்லாட்சி என்று சொல்லுகின்ற அரசை கொண்டு வந்த இந்துக்களை புறக்கணிக்கும் செயலாகும்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்து பிரதி அமைச்சராக பதவியேற்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சிவ சின்னங்களை அணியத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது இந்துக்களின் உருவ வழிபாட்டை நிராகரிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை பார்த்து காபீர்கள் என சொல்பவர்களிடம் எமது இந்து சமயத்தை இந்த அரசாங்கம் அடமானம் வைத்துள்ளது.

ஜனாதிபதி இது தொடர்பாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்து ஒருவரை பிரதி அமைச்சாரக நியமிக்க வேண்டும்.தற்போது இந்து வெளி விவகார அமைச்சராக இருக்கும் கௌரவ அமைச்சர் டி.ம் சுவாமிநாதன் மௌனம் கலைக்க வேண்டும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரிய போராட்டங்கள் இந்துக்களினால் செய்யப்படும் எனவும் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like