உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான ஜப்பான் பயணம் அவசியமற்றது என்கிறார் வேலணை பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் நாவலன்

எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை, சூழலியலை பாதுகாப்பதற்கு அதாவது வெளிப்படையாக கூறின் குப்பை கூளங்களை அகற்றுவதற்கு ஜப்பானுக்கு சென்றுதான் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. எமது நாட்டிலும் பல்வேறு சூழலியல் நிபுணர்கள் செயற்படுகின்றனர்.

தேவைப்படின் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். மேற்படி பயணத்திற்கான செலவினை ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்துவது தற்போதைய சூழலில் பொருத்தமானது என்றும் கருணாகரன் நாவலன் கூறுகின்றார்.

மேலும் தனது பிரதேச சபை உறுப்பினருக்கான மாதாந்த சம்பளத்தினை பொதுநலன் சார்ந்த செயற்பாடுகளுக்கே இவர் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926