ஜப்பான் செல்லும் பணத்தை மக்களுக்கு செலவழிக்கலாம்-வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் சுட்டிக்காட்டு

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான அடிப்படை விடயங்களை கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் பிரதேச சபைகள் இயங்குகின்றன. இந்த நிலையில் அது தொடர்பான விடயங்களை கற்றறிய ஜப்பான் நாட்டுக்கு பிரதேச சபை உறுப்பினர்களை அரசு அழைத்து செல்கின்ற விடயம் பொது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஜப்பானுக்கு செல்வதற்கு செலவாகின்ற பணத்தை மக்களுக்கு பயன்படுத்தலாம்.

இவ்வாறு தெரிவித்தார் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துவாரகன்.

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஜப்பானில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக செல்வுள்ள உறுப்பினர்களின் விபரம் வலி. தெற்கு பிரதேச சபையால் கோரப்பட்டது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன்,
இது தேவை இல்லாத ஒருவிடயம். இந்த பணத்தை மக்களுடைய வாழ்வாதாரங்களை நிறைவு செய்ய பயன்படுத்தலாம். மக்கள் எமக்கு நாடுகள் சுற்றுவதற்கு வாக்களிக்கவில்லை என தெரிவித்தார்.

Share the Post

You May Also Like