நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

நல்லூர் பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை இயக்குவ தற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு தவிசாளர் த.தியாக மூர்த்தி தலமையில் சபை மண்டபத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் குறித்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது:

நல்லூர் பிரதேச சபைக்கு என உத்தியோகபூர்வ இணையத்தளம் உள்ள போதிலும் அது செயலிழந்து காணப்படுகின்றது. எனவே அதனை நாம் மீள இயக்கசபையின் அங்கீகா ரம் கோரப்படுகின்றது என்றார். இதன்போது எழுந்த சபை உறுப்பினர் மதிசுணன் இது நிர்வாகம் சார்ந்த விடயம் இதற்கு சபையில் தீர்மானம் கொண்டு வரத்தேவையில்லை என்றார்.

இதற்குப்பதில் அளித்தசபையின்செயலர், சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து விடயங்களுக்கும் சபையே பொறுப்புக் கூறவேண்டும். எனவே குறித்த தளத்தில் எந்தெந்தவிடயங்கள் பிரசுரிக்கப்படவேண்டும் என்பதை சபையே தீர்மானிக்க வேண்டும் அதற்காகவே சபையின் அங்கீகாரத் துக்குக் கோரப்பட்டுள்ளது.

மேலும் சபையின் உறுப்பினர்களின் பெயர், தொடர்பு இலக்கம் போன்ற விவரங்களை உள்ளடக்கி உறுப்பினர்களின் கருத்தும் கேட்க வேண்டும் எனவே சபை அங்கீகரித்தால் நாம் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும் – என்றார். அனைத்து உறுப்பினர்களுக்கும் அங்கீகாரம் வழங்க இணையத்த எத்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926