சி.சிறீதரன் அவர்களின் முயற்சியால் அரசர்கேணி பிரதான வீதி புனரமைப்பு

பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ள பளை அரசர்கேணி பிரதான வீதி(RDD Road ) பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ சி.சிறீதரன் அவர்களினுடைய தொடர்ச்சியான முயற்சியின் பயனாக தற்போது புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட (PSDG) நிதியின் மூலம்  இந்த வீதி புனரமைப்புக்கான வேலைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ சி.சிறீதரன் அவர்கள் நேரடியாகவே சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் மக்களிடமும் சென்று கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் கௌரவ சு.சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் த.ரமேஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
Share the Post

You May Also Like