யுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா?

மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் நல்லிணக்கம் பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியதுஇவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான சர்வதேச விசாரணை பொறிமுறைகளை நீதி பொறிமுறைகளை ஏனைய விடயங்களுடன் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிவழங்கியிருந்ததுஇந்த பொறிமுறையானது சர்வதேச நிபுணர்களின் தலையீட்டினையும் கொண்டிருக்கவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுஅரசாங்கத்தின் இந்த உறுதிப்பாட்டுக்கு இலங்கையில் சிலர் கடுமையான எதிர்ப்புக்களை முன்வைத்திருந்தனர்அத்துடன் நீதி பொறிமுறைகளில் சர்வதேச தரப்பின் ஈடுபாடு தொடர்பான உறுதிமொழியில் இலங்கை அரசாங்கம் பின்தள்ளியிருந்ததுஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய முக்கிய பிரதிநிதிகளும் விசாரணை பொறிமுறைகளில் சர்வதேச ஈடுபாடு இருக்கப்போவதில்லையென்றும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளைத் தலையிடமுடியாதென்றும் இலங்கையின் நீதி பொறிமுறை மற்றும் சட்ட முறைமைக்கு உட்பட்ட வகையில் சர்வதேச தலையீட்டினை நிராகரிப்பதாக அரசாங்க அமைச்சர்கள் கூறியுள்ளனர்சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் இலங்கை சட்டங்களில் இடமிருப்பதாக கூறியே அவர்கள் இவ்வாறு நிராகரித்துள்ளனர்.

இலங்கையில் பிரதானமாக முன்வைக்கப்படும் விவாதங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச நீதியானது ஒன்று இன்னொன்றுக்கு எதிரானதாக அமைந்திருப்பதாக காணப்படுவதுடன் அது அத்தியாவசியமற்றதாகவும் உள்ளதுஇருந்தபோதிலும் இவ்வாறான ஒரு சிந்தனை தேவையானதாகுறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவாதங்கள் இந்த உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகளை கவனத்தில் எடுப்பது கள்ளங்கபடமற்ற செயற்பாடென தெரிவித்ததுடன் அது சில சந்தர்ப்பங்களில் ஒன்றுடன் ஒன்று பொருத்தமற்றதாகவும் காணப்படுகிறது.ஏனென்றால் உள்ளூர் மற்றும் சர்வதேச இணைவானது உள்ளூர் நீதியினை ஊக்குவிக்கும் அதேநேரம் பதிலளிக்கும் கடப்பாட்டினையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.இதனால் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்புகூறுதல் குறித்த உள்ளூர் மற்றும் சர்வதேச வடிவங்களுக்கு இடைப்பட்ட ஒரு தளத்தினை அமைப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பாக இலங்கையிலுள்ள சகல மக்களும் அரசியல் தலைவர்களும் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போரின்போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பான சகல தரப்பிலான சூத்திரதாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தும் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்காக உள்ளூர் தரப்பினர் முயற்சியினை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதுடன் இலங்கையர்கள் அனைவருக்கும் சந்தேகத்துக்கு இடமின்றி இது மிகவும் முக்கியமானதாகவும் காணப்படுகிறதுஇது பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் அதே நேரம் அதற்கான செயற்பாடுகளை இலங்கையர்கள் தாமாகவே முன்னெடுத்திருந்ததாகவும் அமையும்இவ்வாறு கூறுவதன் மூலம் 30/1 தீர்மானத்தில் கூறப்பட்டதை போல பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறை ஒன்றினை உருவாக்கும் சர்வதேச தலையீட்டினை குறைவாக மதிப்பிடுவதாக அர்த்தம் கொள்ளப்படவில்லை.

இந்த விவகாரத்தில் கட்டுரையாளர் சர்வதேச தலையீட்டுக்கும் செல்வாக்கிற்கும் பங்களிப்பினை வழங்கும் நேர்மறையான நான்கு விடயங்களை அடையாளம் கண்டுள்ளார்அதன் மூலம் இலங்கையில் அர்த்தம் நிறைந்த பதிலளிக்கும் கடப்பாட்டினை செயற்பாடுகளில் ஊக்குவிப்பினை மேற்கொள்ள முடியும்.

முதலாவதாகசர்வதேச மற்றும் உள்ளூர் குற்றங்கள் தொடர்பான முக்கிய வேறுபாடுகளை புரிந்துகொண்ட நன்கு பயிற்றப்பட்ட அனுபவம் நிறைந்த நிபுணர்கள் சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அவசியமானவர்கள்விசாரணையாளர்கள் வழக்கு தொடுநர்கள் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் சிக்கலானதும் பாரியளவிலானதுமான குற்றங்களை பெருந்தொகையான சாட்சியங்கள் மற்றும் அத்தாட்சிகளுடன் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தீர்ப்புக்களை வழங்கவேண்டிய நிலையில் இருக்க வேண்டும்விரிவாக கூறினால் கொலையினை கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்யாது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் என்ற அடிப்படையில் விசாரணையினை மேற்கொள்ளக்கூடிய நிலையில் விசாரணையாளர்கள் இருக்க வேண்டும்இலங்கையில் சர்வதேச குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக குறைவான அனுபவத்தினை கொண்டுள்ள குறைவான நிபுணத்துவத்தினை கொண்டுள்ள நிலையே காணப்படுவதாக சட்ட விமர்சகர்கள் கூறுகின்றனர்இலங்கை மிகவும் வலுவான சட்ட கலாசாரத்தினையும் குற்றவியல் நீதிக்கான பலமான கட்டமைப்பினையும் கொண்டிருக்கும் நிலையில் துறை சார் அறிவு அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் காணப்படும் இடைவெளியினை நிரப்புவதற்கு முன்மொழியப்பட்டிருக்கும் திட்டத்தில் சர்வதேச தலையீடானது மிகவும் அவசியமானதாகும்.

உள்ளூர் நீதித்துறை சார் பணியாளர்களை வெளிநாட்டு பயிற்சிகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் நீதிபதிகள் சர்வதேச சட்ட அனுபவத்தினை பெறுவதற்கும் வழிசமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை நீதிபதிகள் அமைப்பு வெளிநாட்டு அமைப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயம். (இலங்கை நீதிபதிகள் அமைப்பின்2013-2017 திருத்தப்பட ஒத்துழைப்பு திட்டத்தினை பார்க்கஇலங்கையில் நீதித்துறையை வலுவாக்கும் நடவடிக்கைகளில் சர்வதேசம் எவ்வாறு பங்காளிகளாக செயற்பட்டுவருகின்றது என்பது மிகவும் அதிர்ச்சிதரும் உதாரணமாகும்இருந்தபோதிலும் இலங்கையில் சர்வதேச குற்றங்களில் காணப்படும் துறைசார் அறிவு மற்றும் நிபுணத்துவத்தில் காணப்படும் இடைவெளி ஆகியவற்றை கருத்திற்கொண்டு சர்வதேச தலையீடானது ஆளுமையை கட்டியெழுப்பும் பயிற்சிகளுக்கு அப்பால் சென்று முன்மொழியப்பட்ட வெளிநாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு தலையீட்டினை உறுதிப்படுத்த வேண்டும்இதன் மூலம் மாத்திரமே உள்ளூர் வெளிநாட்டு அனுபவங்களையும் அறிவினையும் முறையாக பகிர்ந்து வலுவான நிலையை அடைய முடியும் என்பதனை உறுதிப்படுத்த முடியும்.

சட்டத்தின் விசேட பகுதிகளில் போதிய அறிவினையும் அனுபவத்தினையும் பிஜி கொண்டிருக்காத நிலையில் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவத்தினை வழங்கும் நோக்குடன் இலங்கை நீதிபதிகள் பிஜியின் நீதி பொறிமுறையில் வெளிநாட்டு நீதீபதிகளாக பணியாற்றியிருந்தார்கள் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடமுடியும்அதனால் இலங்கையின் சொந்த ஆளுமை குறைபாடுகளை கருத்தில்கொண்டு சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பான இடைவெளியினை அறிவார்ந்த செயற்பாடுகள் மூலம் நீக்கமுடியும் .

இரண்டாவதாகஇரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும்போது சர்வதேச தலையீடு அவசியமானதாக அமைகின்றதுஏனெனில் இந்த சூழ் நிலையில் போதிய வளங்களும் தேவைப்படுகிறது. . உதாரணமாக ஆவணங்களை களஞ்சியப்படுத்த போதிய நவீன இட வசதிதடய மற்றும் நிதி சார் நிபுணர்கள் செயற்திறன் மிக்க சாட்சிகள் பாதுகாப்புத்திட்டங்கள் மற்றும் நீதி பொறிமுறையினை அதன் செயற்பாடுகளை மக்களும் பாதிக்கப்பட்டவர்களும் அறிந்துகொள்ளும் வகையிலான பிரசார செயற்பாடுகள் ஆகியவற்றை குறிப்பிட முடியும்இலங்கையின் நீதி பொறிமுறையானது சர்வதேசத்தின் உதவியின்றி இந்த சகல வளங்களையும் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டின் நீதி கட்டமைப்பின் மீது குறிப்பிடத்தக்களவிலான அழுத்தத்தினை பிரயோகிக்கமுடியும்நீதியினை செயற்திறன் மிக்கதாக வழங்கும் வகையில் போதுமான வளங்களை பயன்படுத்துவதற்குரிய சிறந்த சந்தர்ப்பத்தினை சர்வதேச வகிபாகத்தை கொண்ட நீதி பொறிமுறை ஒன்றே கொண்டிருக்கும்.

மூன்றாவதாக, யுத்தம் நடைபெற்ற நாடொன்றில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கு சட்ட ரீதியிலான அமைப்புக்கள் இல்லாத நிலையில் மனித ஆளுமையை வலுவாக்கும் முகமாகஉள்ளூர் கட்டமைப்பின் கீழ் சர்வதேச குற்றங்கள் இலங்கையில் குற்றச்செயல்களாக கருதப்படாத நிலையில் இங்கு வெற்றிடம் காணப்படுகிறதுஇந்த வெற்றிடத்தினை குறித்த நாடு சர்வதேச சட்டங்களை தமது வழிகாட்டலாக நோக்குவதன் மூலம் நிரப்ப முடியும்.. உதாரணமாக 2005 இன் இனரீதியிலான வன்முறைகள் சட்டமூலத்தை உருவாக்கும்போது இந்தியா ரோம் சாசனத்தை போர் குற்றங்களையும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களையும் சர்வதேச குற்றங்களாக வரையறுக்கும் ஒரு சர்வதேச சட்ட ரீதியிலான சாசனம் )பயன்படுத்தியதுவரலாறு முழுவதும் இந்தியாவில் இடம்பெற்ற சகல இன ரீதியிலான வன்முறைகளையும் கையாளுவதற்காக இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டதுஇந்தியாவில் தண்டனை விலக்கினை கையாளுவதற்கான புரிதலை இந்த சர்வதேச சட்டம் வழங்கியிருந்ததுஅதே வளியில் இலங்கை தமது உள்ளூர் சட்டங்களை நோக்கும்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களை கையாளும்போது சர்வதேச சட்டங்களிலிருந்து வழிகாட்டல்களை பெறமுடியும்துஷ்பிரயோகங்கள் மற்றும் பலவந்தமான காணாமல்போதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான சாசனம் போன்ற ஐசிசிபிஆர் சட்டத்தினை வரையும்போது இலங்கை ஏற்கனவே சர்வதேச சட்டத்தில் தங்கியிருந்தது.

இறுதியாக சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும்போது சர்வதேச பிரசன்னத்தை கொண்டிருப்பது அரசியல் அழுத்தத்தையோ அல்லது தலையீட்டினையோ ஏற்படுத்தப்போவதில்லைகடந்தகாலத்தில் இலங்கையின் அரசியல் அமைப்பினை மீறும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் நீதிபதிகளின் தலையீட்டினை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் நாடியிருந்ததுநீதி பொறிமுறையின் பகுதிகளாக இருக்கும் வழக்கு தொடுநர்கள் விசாரணையாளர்கள் இலங்கையர்கள் உள்ளிட்டவர்களை முட்டாள்களாக்கும் நெருக்கடிகளை சர்வதேச தலையீடு இல்லாதொழிக்கும். 30/1 .நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழியின் கீழ் சர்வதேச தலையீட்டுடனான நீதி பொறிமுறை ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க சலிப்படையாது என கருதப்படுகிறதுசர்வதேச தலையீட்டினை கொண்டிருப்பதன்மூலம் இலங்கை அரசாங்கமானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை வழங்குவதற்காக சட்டரீதியிலான அமைப்புக்களையும் வளங்களையும் அவசியமான நிபுணத்துவத்தினையும் நீதி பொறிமுறை கொண்டிருக்கின்றது என்பதனை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த முடியும்சுருக்கமாகநீதி பொறிமுறை சாத்தியமானதாக உள்ளூர் மற்றும் அவசியமானதாக சர்வதேச ரீதியானதாக அமையவேண்டும்.

Share the Post

You May Also Like