குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராமத்தில் நிலவி வந்த குடிநீர்ப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

முரசுமோட்டை கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ம.நந்தகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு நடைபெறும் வீதி புனரமைப்பு பணிகளையும் அங்கு நிலவும் குடிநீர்ப்பிரச்சினைகளையும் ஆராய சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் புனரமைப்பு செய்யப்படும் வீதிகளை பார்வையிட்டதுடன் மக்களிடம் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்தார்.

உடனடித் தீர்வாக கரைச்சிப்பிரதேசசபையின் நீர்த்தாங்கி மூலம் அம்மக்களுக்கு நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நிரந்தரத்தீர்வாக கிளிநொச்சி மாவட்ட நீரவழங்கல் வடிகால் சபையினால் உப்புநீரை நன்னீராக்கி வழங்கும் குடிநீர் சுத்திகரிப்பு செயன்முறையும் மறுநாளே ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினருடன் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் கந்தசாமி சிவகணேசன், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், செயலாளர் கம்சநாதன்,உட்பட கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்களான சின்னையா தவபாலன், அருணாசலம் சத்தியானந்தன், சின்னையா சுப்பையா, ஆகியோரும் சென்றிருந்தனர்

Share the Post

You May Also Like