தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராக கருணாநிதி நியமனம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை புனரமைப்பு செய்வது தொடர்பாக கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் கட்சியை புனரமைப்பு செய்வதற்காக மாவட்டக்குழுவினால் நடராசா கருணாநிதி வவுனியா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரக்கிளைகள் அமைக்கப்படுவது மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.
வவுனியா பூந்தோட்டத்தை பிறப்பிடமாகவும்இ வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கட்சியின் ஆயுள்கால உறுப்பினராவார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா நகரசபையில் குடியிருப்பு வட்டாரத்தில் விகிதாசார வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share the Post

You May Also Like