ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவராக லோகநாதன்

ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவராக லோகநாதன் !தொழிலாளர் நலனுக்கு கிடைத்த கெளரவம் என்கிறார் இராஜேஸ்வரன்

மூத்த தொழிற்சங்க வாதியும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவருமான எஸ். லோகநாதன் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை கடந்த காலத்தில் அவர் தொழிலாளர் நலனுக்காகவும் தமிழ் தேசியத்தின் இருப்புக்காகவும் செய்த சேவைக்கு கிடைத்த கௌரவமாகும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பலமான தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை தோற்றுவித்துள்ளதோடு ஆற்றலும், ஆளுமையும் மிக்க ஒருவரை இச் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். எதிர்காலத்தில் இச்சம்மேளனம் தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களுக்கு வலுவூட்டி விளைதிறன், வினைத்திறன் மிக்க சேவையை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஸ்ரீ லங்கா அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள மூத்த தொழிற்சங்கவாதி எஸ்.லோகநாதனுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் இலங்கைத் தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதிக்கான உப தலைவர் க.கனகராஜா உள்ளிட்டோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share the Post

You May Also Like