ஹிட்லரை போன்ற ஆட்சி பாரதூரமானது..

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் ஹிட்லரை போன்ற ஆட்சியை நடத்த வேண்டும் என்ற விடயம் எந்தளவு பாரதூரமானது என்பதை ஒருவரும் இன்னும் உணரவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது.

தற்போதைய அரசாங்கம் சீரான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென்ற நிலைப்பாடு பலர் மத்தியிலும் உள்ளது.

இதன் காரணமாக அடக்குமுறை வாயிலாகவேனும், சீரான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சில தரப்பினர் கூறுகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் அடக்குமுறைகளின் மூலம் தனது இலக்கை அடைய முயற்சிப்பவர்.

ஜனநாயகத்துக்கு எதிரான இந்த அடக்குமுறை மிகவும் பாரதூரமானதென்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like