வரலாற்று பாடநூல்களில் சில தமிழ் மன்னர்களின் பெயர்கள் இல்லை

 

 

வரலாற்றுப் புத்தகங்களில் தமிழ் மன்னர்களின் சில பெயர்கள் இல்லாமற்போயுள்ளன. இன்று நாம் அந்த வரலாறு களை இழந்து நிற்கின்றோமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அக்கராய மன்னனின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில், “கிளிநொச்சியில், அக்கராயன் என்ற மன்னன் ஆட்சிசெய்தான். அவன் ஓர் செங்கோல் ஆட்சி செய்திருக்கிறான் என்பதை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.

பல ஆண்டுகளிற்குப் பின்னர் இங்கு ஓர் தமிழ் மன்னன் ஆண்டிருக்கின்றான் என்பதை நினைவுபடுத்துவதற்காக அந்த மன்னனின் அழகிய சிலை ஒன்றை உருவாக்கி இன்று வைத்திருக்கின்றோம். ஆனால் வரலாற்றுப் புத்தகங்களிலே இவ்வாறானவர்களின் பெயர்கள் இல்லை. இன்றும் நாம் அவர்களின் வரலாறுகளை இழந்துள்ளோம்.

இந்த பலம்வாய்ந்த ஆட்சியுள்ள நாட்டிலே இவ்வாறான ஓர் மன்னன் ஆட்சி செய்துள்ளான் என்பதை இளைஞர்கள், சிறார்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like