விஜயகலாவின் உணர்வை மதிக்கவேண்டும்- வடக்கு அவைத்தலைவர் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய விடயத்தை தெற்கில் உள்ள அரசியல்வாதிகளே பெரிய விடயமாகப் பார்க்கிறார்கள் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அவை தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் வடக்கில் நிகழ்கின்ற கலாசார சீரழிவுகள், வன்முறைகளை முன்னிறுத்தியே அவர் பேசியுள்ளதாகவும் அதனை உணர்வுபூர்வமான பார்க்கையில் பெரியவிடயமாகத் தெரியாது என்றும் அவ்ர குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒரு இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறான ஒரு கருத்தை கூறியிருப்பது பிழையாக இருந்தாலும் அவரின் உணர்வை மதிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like