கொலையாளி கைது செய்யக் கோரி கண்டன பேரணி

வ. ராஜ்குமார்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குபட்ட இலுப்பங்குளம் கிராத்தில் கடந்த மாதம் 28ம் திகதி கொலை செய்யப்பட்டாதாக சந்தேகிகிகப்படும் இராஜரத்தினம்.சுரேஸ் என்பவரது கொலை தொடர்பாக கொலையாளி கண்டு பிடிக்கபட்டு தண்டனை வழங்க வேண்டும் எனகோரி இன்று (08) ம் திகதி ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் கொலை செய்யப்பட்டவர் திட்ட மிட்ட வகையில் கொலை செய்யப்பட்டு குளக்கரையில் சடலமாக விசப்பட்டள்ளார்.எனவே அவர் சட்டவிரோத சம்பவம் ஒன்றை பார்த்த காரணத்தால் குற்றவாளிகள் அவரை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டள்ளார்.என சந்தேகம் எழுவதாகவும்

அவருடைய மனைவி சுதர்சினி குழந்தை பிரசுவித்து குழந்தையின் பெயர் நிதர்சிகா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரின் மனைவியையும் பிள்ளையையும் கூட கருத்தில் கொல்லாமல் இக் கொலை இடம் பெற்றுள்ளது. இக் கொலையுடன் தொடர்புடையவர்கள் எவரும் இன்றுவரை கைது செய்யப்படாத நிலையில் இப்பிரச்சினைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வழியுருத்தியே இப்போராட்டம் முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் போது பல அரசியர் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொது மக்களும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுனர்.நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் இக் கொலைக்கான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என வழியுருத்தினார். அத்துடன் பொது மக்கள் விரும்பும் பட்சத்தில் இப்பகுதியில் பொலிசாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.எனவும் தெரிவித்தார்.

இதன் போது பொது மக்களுடன் பேசிய நிலாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அணில் ஜெயசிங்க கருத்து தெரிவிக்கும் போது குற்றவாளிகளை தீவிரமாக நாம் தேடி விசாரனை செய்து வருகின்றோம்.பொது மக்களின் நம்பிக்ககைக்கு பாத்திரமாக இந்த கொலையுடன் சம்மந்தப்படடவர்களை நாம் விரைவில் கைதி செய்து இப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like