கிளிநொச்சியில் 16வது திருக்குறள் மாநாடு சிறப்புற நிறைவுபெற்றது

கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16வது திருக்குறள் மாநாடு நேற்று நிறைவுபெற்றது.

குறித்த மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இரண்டாம் நாளான நேற்று குறித்த மாநாடு நிறைவுக்கு வந்தது, கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் குறித்த மாநாடு இடம்பெற்றது.

இரண்டாம் நாளான நேற்றைய மாநாடு கிளிநொச்சி தமிழ் சங்க தலைவர் எஸ்.இறைபிள்ளை தலைமையில் மாலை 2 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன்,மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கிளிநொச்சியில் தமிழுக்காக உழைத்தவர்கள் மற்றும் தமிழ் முறைப்படி திருமணம் செய்தவர்கள், சிறந்த சேவகர்கள் உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Share the Post

You May Also Like