விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் விளையாட்டு உபகரணங்கள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் உதைபந்தாட்ட போட்டியை நடாத்துவதற்கு நாவற்காடு மைதானமும் நாவற்காடு மக்களால் சீர் செய்யப்பட்டது.இது பகலிரவு மின்னொளி உதைபந்தாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like