மைதான திறப்புவிழாவும்,உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும்

(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் முயற்சியால் விளையாட்டுத் துறை அமைச்சினால் ஐம்பத்து ஏழு இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட
மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகம் தனது 55வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் பகலிரவு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மைதான திறப்பு விழாவும்.

எதிர்வரும் 2018. 07. 14 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பாரத் விளையாட்டுக் கழக தலைவர் ரி.விநாயகமூர்த்தி தலைமையில் மு.ப.9.00 மணிக்கு நாவற்காட்டில் அமைந்துள்ள.
பாரத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர் – மட்டக்களப்பு மாவட்டம்),சிறப்பு அதிதி எம்..உதயகுமார் (அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டம்)
கௌரவ அதிதிகளாக எஸ்.சுதாகர் (பிரதேச செயலாளர் மண்முனை மேற்கு),எஸ்.சண்முகராஜா ( தவிசாளர் மண்முனை மேற்கு),ரி.நிர்மல்ராஜ் ( உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மண்முனை மேற்கு),ரி.இராமகிருஸ்ணன் ( பிரதேச சபை உறுப்பினர் மண்முனை மேற்கு),
ரி.கோபாலப்பிள்ளை ( அதிபர் – மட் /நாவற்காடு நாமகள் வித்தியாலயம்),பி.ரி.நசீர் ( பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் – வவுணதீவு),ஆர்..தட்சணாமூர்த்தி ( கிராம உத்தியோகத்தர் – நாவற்காடு),என்.ரங்கேஸ்வரன் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் – நாவற்காடு) உட்பட கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share the Post

You May Also Like