தேசியம் செல்லும் கிளிநொச்சி அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் சிறீதரன் எம்.பி

வடக்கு மாகாணத்தில் வெற்றியீட்டி தேசியம் செல்கின்ற கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட அணியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாண அணியை வெற்றி கொண்டு தேசிய ரீதியல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் கிளிநொச்சி மாவட்ட தேர்வு அணியினர்.


கிளிநொச்சி மாவட்டத்துடுப்பாட்ட அணியினர் வரலாற்றில் முதல்தடைவையாக கடந்தமுறை மாகாணத்தின் சம்பியனானார்கள். இம் முறையும் சம்பியானானதோடு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தேசிய ரீதியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கிளிநொச்சி மாவட்ட மென்பந்து, மேசைப்பந்தாட்டம், மெய்வல்லுனர் ஆகியவற்றின் பயிற்றுநர் ச.குமார், தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பெரியபரந்தன் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like