பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முள்ளிப்பற்று உப அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

மிக நீண்ட காலமாக பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகமான முள்ளிப்பற்றுக்கான ஆயுள்வேதம்,நூலகத்துடன் கூடிய உப அலுவலகம் அமைப்பதற்கான நிகழ்வுகள் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் தலைமையில் நடைபெற்றது.

7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற இருக்கும் இந்த கட்டடத்திற்கான காணியை சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். மாகாண சபையினுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்தும், பிரதேச சபை நிதியிலிருந்தும் அமையப் பெற இருக்கும் இந்தக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாட்டிவைத்தார்

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்களுடன் சமூக ஆர்வலர் சங்கரப்பிள்ளை விக்னேஸ்வரன்,பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதே சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share the Post

You May Also Like