கிழக்கு பல்கலை ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியினால் நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 810 மில்லியன் ரூபா செலவில் ஐந்து மாடிகளை கொண்ட தொடர்பாடல் மற்றும் வர்த்தக பீட கட்டடம் மற்றும் 740 மில்லியன் ரூபா செலவில் உள்ளக அரங்க கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் என்பனவும் நாட்டப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share the Post

Warning: mysql_query(): Unable to save result set in /home/newsuthanthiran/public_html/wp-includes/wp-db.php on line 1926