மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமத நிலையில்…

இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமத நிலையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று சந்தித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற அந்த சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகளின் அழுத்தம் இலங்கைக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் சம்பந்தன் கோரியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் எனவும் சுவிர்ட்சலாந்து தூதுக்குழுவிடம் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like