கருணாநிதியின் பூதவுடலுக்கு செல்வம்  எம்.பி நேரில் அஞ்சலி

 

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பூதவுடலுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ்நாட்டுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பிரதமர் ரணில் விக்கரமசிங்க அனுப்பிய இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்தனர்.

Share the Post

You May Also Like