அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் எமது மக்களை கடனாளிகளாக மாற்றுகிறது

அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து எமது மக்களை கடனாளிகளாக மாற்றி வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள மற்றும் ஏனைய கொடுப்பனவு குறித்த பிரேரணை, சேர் பெறுமதி வரி (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கில் எமது மக்களின் சுய தொழில் பறிக்கப்பட்டு வருகின்றது. விவசாயம் செய்ய முயற்சித்தால் அதில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு உள்ளது. மீன்பிடிக்கு சென்றால் அங்கும் தென் பகுதி சிங்கள மீனவர் ஆக்கிரமிப்பு உள்ளது. சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது மக்கல் இன்றும் வாழ்வாதார நிலைமைகளை முன்னெடுக்க முடியாது போராட வேண்டியுள்ளது.

கடன்களில் எமது மக்கள் நெருக்கப்பட்டு அன்றாடம் போராடி வருகின்றனர். சுய தொழிலில் ஈடுபட முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது இவை அனைத்துமே அரசாங்கதின் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டும். இராணுவத்தையும் கடற்படையையும் வைத்துகொண்டு எமது பிரதான தொழில் பறிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே எமது மக்கள் எதிர்பார்க்கும் சாதாரண வாழ்க்கையை வாழ அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Share the Post

You May Also Like