வாழைச்சேனை திரேசா ஆலயத்திற்கு சம்பள பணத்தினை வழங்கிய வாழைச்சேனை உறுப்பினர்

வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கட்டட பணிக்காக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தனது சம்பள பணத்தினை ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசன் தனது ஐந்தாம் மாத கொடுப்பனவான பதினையாயிரம் ரூபாவினை வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கட்டட பணிக்காக ஆலய வணபிதாவிடம வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வளர்களான எஸ்.பிரதீபன், கே.தேவகானந் ஆகியோரும் கலந்து கொண்டனர். சில அரசியல் வாதிகள் சம்பள பணத்தை தமது செலவுக்கு எடுக்கும் நிலையில் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் இவ்வாறு முழுச் சம்பளத்தையும் வழங்குவது பாராட்டத்தக்கது என வணபிதா தெரிவித்தார்.

 

Share the Post

You May Also Like