தெளிகருவி மற்றும் மிதிவண்டி, கையளிப்பு.

வேளாண் தொழிலை மேற்கொள்ளும் ஒருவருக்கு தெளிகருவியும், பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் மாணவிக்கு மிதிவண்டி ஒன்றினையும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 25,276.00 ரூபாய் பெறுமதியில் அவர் இவ்வுதவிகளை வழங்கியுள்ளார்.

12.09.2018 (புதன்) நேற்றைய நாள் நடைபெற்ற இந் நிகழ்வில், பயனாளிகள் கலந்துகொண்டு ரவிகரன் அவர்களிடமிருந்து உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like