பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் அரசு! – ஜெனிவாவில் வலியுறுத்து

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டு வரப்படும் புதிய சட்ட வரவு சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்கவேண்டும் எனத் தன்னிச்சையாகத் தடுத்து வைத்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை அரசைக் கோருகின்றோம் என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தன்னிச்சையாகத் தடுத்துவைத்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Share the Post

You May Also Like