பொதுநிதிகளை கையாளும் விடயத்தில் அவதானம் தேவை- ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு

பொது நிதிகளை சுய தேவைகளுக்காக கையாள்வது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட மகிழூர் முனை சக்தி இளைஞர் கழகத்தின் சிரம சக்தி வேலைத்திட்டத்தினூடாக மகிழூர் முனை கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்திற்கு சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் தினேஷ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தபின்னர் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக வரக்கூடியவர்கள். எனவே உங்களுடைய இவ்வாறான செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன்.இந்த இளைஞர் கழகம் பல பொது விடயங்களில் பங்கெடுப்பது மன மகிழ்ச்சியளிக்கின்றது. இது போன்ற பல கிராமத்துடனான செயற்பாடுகள் இடம்பெற வேண்டும்.இதற்கு உதவியாகவும் பக்கபலமாகவும் நான் இருப்பேன்.

முக்கியமாக நான் கூறிக்கொள்ள விரும்பும் விடயம் என்னவென்றால் பொது நிதிகளை கையாளும் விடயத்தில் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் கையாளுகின்ற விதத்தில்தான் மக்கள் மத்தியில் அளவிடப்படுவீர்கள் .எனவே பொது நிதியை ஒரு போதும் சுய தேவைகளுக்காக பயன்படுத்தவும் கூடாது பயன்படுத்த விடவும் கூடாது. எனவே இவ்வாறான விடயங்களில் நீங்கள் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்

Share the Post

You May Also Like