முள்ளியவளை மாதர் கிராம அபிவிருத்திச்சங்க வருடாந்த கூட்டத்தில் ரவிகரன் பங்கேற்பு

முள்ளியவளை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க வருடாந்த கூட்டம் நடைபெற்றது. இதில் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் கலந்துகொண்டார்.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திருமதி.செல்வராசா – கனகமணி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, 2018.09.13(வியாழன்) நேற்றைய தினம் முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில், கிராமத்தில் மின்சாரம் வழங்கல் மற்றும் செங்குந்தா வீதியின் சேதமடைந்த பகுதிகளின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் , கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன் மற்றும் இராசரத்தினம் – பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், முள்ளியவளை கிழக்கு கிராம உத்தியோகத்தர் திருமதி.சுதாகரன் – உமாபசுபதி மற்றும், கரைதுறைப்பற்று உதவி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமூகசேவை உத்தியோகத்தர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like