சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்! – சம்பந்தன் திட்டவட்டம்

“மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்போம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை – திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார்.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பேரில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி அண்மையில் முல்லைத்தீவில் பொதுமக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Share the Post

You May Also Like