வறிய மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான ஈருருளிகள் நேற்றுமுன்தினம் வழங்கிவைக்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட 10 மாணவர்களுக்கு மாகாணசபை உறுப்பினரால் ஈருளிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்தநிகழ்வை தொடர்ந்து வவுனியா வடக்கு சேனைனப்புலவு உமையாள் வித்தியாலயத்திற்கு கொடிக்கம்பங்களும் மாகாணசபை உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தநிகழ்வுகளில் வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் ச.தணிகாசலம் , உறுப்பினர்களான சத்தியேந்திரன், செந்தூரன் மற்றும் கலை கலாசார பேரவையின் தலைவர் பூபாலசிங்கம் உட்பட வலயக்கல்விப்பணிமனையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like