வீதி விளக்குகள் பொருத்த நிதி ஒதுக்கீடு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குள் கிராமிய மின்னொளி வழங்கும் வேலைத்திட்டத்துக்காக 2.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

முகாவில் பகுதியில் இடம்பெற்ற பொது அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு கிராம மட்ட அமைப்புக்கள் தவிசாளரிடம் சபை அமைந்து ஆறு மாதங்களாகிவிட்டது எமது கிராமத்துக்கு வீதி விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் மற்றும் களவு,கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியின் மூலமும் பிரதேச சபையின் நிதிமூலமும் சேர்த்து இம்முறை 2.2 மில்லியன் ரூபாய்களை கிரமிய மின் வெளிச்சம் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் குறித்த பிரச்சனைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.

இங்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான அருள்செல்வி,ரமேஷ்,வீரவாகுதேவர் மற்றும் கிராம அலுவலர் காண்டீபன் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளும்கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like